283
Read Time1 Minute, 12 Second
கரூர் : காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, 23.07.2020 அன்று பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி 4 ரோடு ஜங்ஷன் அருகில், அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் சென்று ஆய்வு செய்தபோது, டிராக்டரில் மணல் ஏற்றிச்சென்ற 40 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கடவூர் வீரகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்ததையடுத்து, அவரிடமிருந்த டிராக்டர் with ட்ரெய்லரையயும், 1 யூனிட் மணலையும் பறிமுதல் செய்து, பாலவிடுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.