திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி மர வங்கி என்ற தனியார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அப்துல் கலாம் அவர்களது திருஉருவ படத்திற்கு ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,மற்றும் பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அப்துல் கலாம் பற்றி பேசும் போது அக்னி சிறகுகள் புத்தகத்தில் எழுதியதை எடுத்துரைத்தார். ஒரு முறை நான் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது என்னிடம் வந்து சாப்பிட்டீங்களா? என்று என்னிடம் கேட்டது, இன்னும் என் மனதில் ஒலித்து கொண்டிருக்கிறது என்றார். புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும், பசுமை பூமியாக மாற்றும் வகையில் அப்துல் கலாமின் அறிவுரையின் பேரில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்டவை குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்