சென்னை பெருநகர காவல்துறையின் அசத்தல் திட்டம், மக்கள் வரவேற்ப்பு

Admin
1 0
Read Time3 Minute, 48 Second

சென்னை : பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடமும், ‘வாட்ஸ் ஆப் வீடியோ கால்’ வாயிலாக புகார் அளிக்கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம், வெளியிட்ட செய்திக்குறிப்பு, பொதுமக்கள், சென்னை காவல் ஆணையர், திரு.மகேஷ் குமார் அகர்வாலிடம், 63691 00100 என்ற, ‘வாட்ஸ் ஆப்’ எண்ணிற்கு, ‘வீடியோ கால்’ வாயிலாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில், மதியம், 12:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை, புகார் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10 நாட்களில், 188 புகார்கள் பெறப்பட்டன.

அவற்றில், 129 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது; 40 புகார்கள், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன. 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, அறிவுரையின்படி, இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இனி, பொதுமக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடம், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம், 12:00 மணியில் இருந்து, 1:00 மணி வரை, ‘வாட்ஸ் ஆப் வீடியோ காலில்’ புகார் அளிக்கலாம்.

புகார் அளிக்க வேண்டிய துணை ஆணையர்களின், ‘வாட்ஸ் ஆப்’ எண்கள்:

 1. தோமஸ் மௌண்ட் – திரு.பிரபாகர்,IPS – 7010110833

 2. அடையார் – திரு.விக்ரமன், IPS -8754401111

 3. டி நகர் – திரு.ஹரி கிரண் பிரசாத், IPS -9003084100

 4. மயிலாப்பூர் – திரு. சேசாங் சாய், IPS -6381100100

 5. திருவல்லிக்கேணி – திரு.தர்மராஜன், IPS -9498181387

 6. கீழ்பாக்கம் – திரு.அதிவீரபாண்டியன் -9498010605

 7. பூக்கடை – திரு.கார்த்திக், IPS- 9498008577 

 8. வண்ணாரப்பேட்டை – திருமதி.சுப்புலட்சுமி -9498133110

 9. மாதவரம் – திரு.பாலகிருஷ்ணன், IPS -9498181385

 10. புளியந்தோப்பு -திரு.ராஜேஷ் கண்ணன், IPS – 6369423245

 11. அண்ணாநகர் – திரு.ஜவகர், IPS – 9176426100

 12. அம்பத்தூர் – திருமதி.நிஷா, IPS – 9176427100


1. Deputy Commissioner of Police, St.Thomas Mount District. 7010110833
2. Deputy Commissioner of Police, Adyar District. 8754401111
3. Deputy Commissioner of Police, T.Nagar District. 9003084100
4. Deputy Commissioner of Police, Mylapore District. 6381100100
5. Deputy Commissioner of Police, Triplicane District. 9498181387
6. Deputy Commissioner of Police, Kilpauk District. 9498010605
7. Deputy Commissioner of Police, Flower Bazaar District. 9498008577
8. Deputy Commissioner of Police, Washermenpet District. 9498133110
9. Deputy Commissioner of Police, Madhavaram District. 9498181385
10. Deputy Commissioner of Police, Pulianthope District. 6369423245
11. Deputy Commissioner of Police, Anna Nagar District. 9176426100
12. Deputy Commissioner of Police, Ambattur District. 9176427100

ஏற்கனவே, காவல் ஆணையரிடம், 63691 00100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, சுருக்கமாக புகார் அளிப்பதில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த எண்ணிற்கு புகார் அனுப்பலாம். அதுபற்றி ஆராய்ந்து, சென்னை காவல் ஆணையர், சம்பந்தப்பட்ட நபரை, வீடியோ காலில் தொடர்பு கொள்வார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

வண்ணாரப்பேட்டை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் நேற்று இரவு நடிகர் ஷ்யாம் கைது, திரையுலகினர் அதிர்ச்சி

435 சென்னை: பணம் வைத்து சூதாடிய வழக்கில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami