தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட பெண் உதவி ஆய்வாளருக்கு மக்கள் பாராட்டு

Admin

சென்னை:  அயனாவரத்தில் தண்ணீர் பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுத்து, அடி குழாய் அமைத்து தந்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில், ஆனந்த விநாயகர் கோவில், இரண்டாவது தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள், குடிநீருக்காக வீதிவீதியாக அலைந்தனர்.இதற்கு காரணம், அப்பகுதியில் உள்ள இரு பிரதான கட்சிகளின் முட்டுக்கட்டை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, அயனாவரம் போலீசாரிடம், மக்கள் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, குடிநீர் வாரிய பொறியாளரிடம் பேச்சு நடத்தி, அப்பகுதியில், புதிதாக அடிக்குழாய் ஒன்றை, நேற்று முன்தினம் அமைத்து தந்தார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருக்கு, பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது - எஸ்பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452