கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது – எஸ்பி நடவடிக்கை

Admin

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 25.07.2020 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த முடிவைத்தானேந்தல் கலைமகள் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கல்ராமன் என்ற வேல்முருகன் (வயது30) என்பவர் ஒரு தனியார் கல்லூரி, தங்கள் சமூகத்தை சேர்ந்தது என்றும், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டிருந்தார்.

இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உத்தரவின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விரைந்து கைது செய்தார்.

இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்

555 இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த திரு.உமையசேகர் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மிகவும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452