மதுரையில் திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Admin

மதுரை: மதுரையில் பரோலில் சிறையில் இருந்து வந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை கீரைத்துறை சேர்ந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வி கே குருசாமி தரப்புக்கும், அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே நீண்டநாள் முன்பகை இருந்து வந்த நிலையில், இரண்டு தரப்பிலுமே பல கொலைகள் நடந்துள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த விகே குருசாமி உறவினர் ஒருவர் இறப்பிற்காக பரோலில் வந்துள்ளார். இந்தநிலையில், கீரைத்துறையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கொண்ட கும்பல், அங்கு வீட்டில் இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியது.  இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, 1 கைது

506 திருப்பூர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452