Read Time1 Minute, 12 Second
திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. துரை அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்ட கேசவன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த தமிழரசன் (39), நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் (26), தெற்கு தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி (26) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் 1 யூனிட் மணல், மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி