காவலர் உயிரை விட்டு வைக்காத இணையதள ரம்மி விளையாட்டு

Admin

திருச்சி அருகேஇணையதள ரம்மி விளையாட்டால் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0
Read Time1 Minute, 49 Second

திருச்சி : திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அனலை பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த் (26). இவர் ஜீயபுரம் அருகே உள்ள வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

ஆனந்த்திற்கு இணைய வழி ரம்மி சீட்டு ஆட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வழங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தேதி இரவு 9 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குச் சென்றவர். இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கு மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து விட்டு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இவரின் பிரேதம் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு

569 சென்னை: சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் தீயணைப்பு காவல்துறை சார்பாக “கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்” என்ற தலைப்பில் மாநில அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami