தமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்

Admin
0 0
Read Time5 Minute, 9 Second

வேலூர் : தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களை மையமாக கொண்டு மர்மகும்பல் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் ‘இன்டர்நெட்’ அழைப்புகள் மூலம் நடைபெறுவதாக ஒருங்கிணைந்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU – Organised Crime Intelligence Unit) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து நடந்த விசாரணையில், சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூரில் ஓசிஐயு குழுவினர் சோதனையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். வேலூர் ஓ.சி.ஐ.யு. காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன், வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் சோதனையை தொடங்கினர். அதன் அடிப்படையில் வேலூர் கலாஸ்பாளையம் சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஓசிஐயு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நள்ளிரவு 2 மணிக்கு சோதனையை தொடங்கினர். இதனையடுத்து அந்த வீடுகளிலிருந்து கணினி மற்றும் இணையதள கருவிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்துஇ போலீசார் சி.பி.யு., கம்ப்யூட்டர், இணையதள சேவை கருவிகள், 2 பேட்டரிகள் உள்ளிட்ட சில பொருட்களையும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்த வீட்டின் உரிமையாளர் பாபு. அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ஒருவர் வந்துஇ அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். அந்த நபர் பாபுவிடம்இ தன்னுடைய பெயர் சிராஜ் என்றும் சென்னையில் உள்ள கண்ணையன் சம்பத் என்பவரின் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பாபு அந்த நபருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் அந்தநபர் கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதிகளை வீட்டில் ஏற்படுத்தி உள்ளார். அதன்பின்பு அந்த நபர் சென்னைக்கு சென்றுவிட்டார். வேலூர் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் வீட்டு வாடகையை மட்டும் பாபுவின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வந்து உள்ளார். மேலும் சிராஜ் இணைய சேவையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோஇ கணிணியை மீண்டும் இயக்குவதற்கோ அருகே வசிப்பவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கும்படி கூறுவார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனிடையே சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின்னர், கம்ப்யூட்டரை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பாபுவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, தமிழகத்தில் முக்கிய 4 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. வேலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் செய்யும் பணிக்காக இந்த 4 மையங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதுகிறோம். இதில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தீவிரவாத குழுக்களுக்கோ, தேசவிரோத குழுக்களுக்கோ ஏதேனும் பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. பாபுவின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட விவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்

483 நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாடு அருகே நாகலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami