எந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி அவர்கள் அறிவிப்பு.

Admin
1 0
Read Time3 Minute, 58 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (12.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை அவசர உதவி எண். 100 மூலம் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை 2623 அழைப்புகள் வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்” எண் 95141 44100 என்ற எண்ணிற்கு 389 அழைப்புகளும் 39 வாட்ஸ் ஆப் தகவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளன.

இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சி.சி.டி.வி காமிராக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சி.சி.டிவி காமிராக்கள் அதிக அளவில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகரில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அவை முடிந்தவுடன் இன்னும் அதிக அளவில் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும், சாலை போக்குவரத்தை சீர் செய்வதற்கு முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அதிகரிக்கப்படும், மேலும் அடிக்கடி விபத்து நிகழக்கூடிய பகுதிகளில் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் பலகைகள் தேவைப்படும் இடங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

♻தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100 அல்லது ‘ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நேரடி தகவல், குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் ஆப் தகவல் அளிக்கலாம். இந்த காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் செயல்படும் என்றும், சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால் மேற்படி எண்களுக்கு தகவல் கொடுக்கலாம். அவ்வாறு தகவல் தருபவர்களுடைய விபரம் இரகசியமாக வைக்கப்படும் என்றும், பொதுமக்களின் அழைப்புகளுக்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திருமதி. அன்னபாலா, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை காவல் ஆளினர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது.

929 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami