Read Time1 Minute, 1 Second
மதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் முகக் கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருபவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலமாக பல்வேறு வழிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…