6 பேரை அதிரடியாக கைது செய்து கூடல்புதூர் காவல்துறையினர்

Admin
0 0
Read Time4 Minute, 39 Second

மதுரை : மதுரை மாநகர் கூடல்புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து திருடும் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை விரைவில் பிடிக்க காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு திரு.பழனி குமார் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவர்கள் உத்தரவுப்படி, கூடல்புதூர் காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர், திரு. செந்தில்குமார் தலைமை காவலர் திரு. வேல்முருகன் முதல்நிலை காவலர்கள் திரு.செல்வகுமார் மற்றும் திரு.சதீஷ் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்ததில் கடந்த 01.07.2020ம் தேதி பிளாட் 1980, TNHP காலனி ஆனையூர் கூடல்நகரில் வசிக்கும் மோகன் என்பவரின் மகன் அசோக் என்பவர் தனது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகளும் பணம் ரூபாய் 24,000/- திருடு போய்விட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தார்.

புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்தார். அவ்வழக்கில் ஈடுபட்ட எதிரிகளான யுவராஜ் சிறார், தங்கபாண்டி(19), சோனை (இறந்துவிட்டார்), ஆகியோர்களை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க கட்டியை கைப்பற்றினார்கள்.

மேலும் கடந்த 04.07.2020ம் தேதி பிளாட் 12/6-ல், புது விளாங்குடி, ராமமூர்த்தி நகரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் முனீஸ்வரன் என்பவர் அவரது வீட்டின் ஜன்னலை யாரோ உடைத்து பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், 1.350கி.கி வெள்ளி மற்றும் பணம் ரூபாய் 5,000/- திருடிவிட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று குற்ற எண்.1195/ 2020 பிரிவு 457 380 IPC கீழ் வழக்கு பதிவு செய்யம்பட்டு அவ்வழக்கில் ஈடுபட்ட நபர்களான யுவராஜ் சிறார் (2) சோனை (இறந்துவிட்டார்),  கருப்பசாமி (19),  இந்திரா (58) (யுவராஜின் தாயார்) (5) லட்சுமி 36/2020 க/பெ பாண்டி, வானவில் தெரு, ஆனையூர், ஆகியோர்களை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 24 1/2 பவுன் தங்க கட்டிகள், 1.45கி.கி வெள்ளி பொருட்களை கைப்பற்றினர்.

மேலும் கடந்த 02.07.2020ம் தேதி பிளாட் 1980, TNHP காலனி ஆனையூர் கூடல்நகரில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் மகன் பாஸ்கரன் என்பவர் அவரது வீட்டின் கதவை யாரோ உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூபாய் 70,000/- திருடு போய்விட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ் அவர்கள் குற்ற எண்.1190/ 2020 பிரிவு 457 380 IPC கீழ் வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் ஈடுபட்ட எதிரிகளான  யுவராஜ் சிறார் (2) சோனை (இறந்துவிட்டார்) , சூர்யா என்ற கேட்டு சூர்யா (19),  ஆகியோர்களை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 45,000/-ம் கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட எதிரிகளான யுவராஜ் சிறார், தங்கபாண்டி, சூர்யா @ K2 சூர்யா, லட்சுமி, இந்திரா, கருப்பு @ கருப்பசாமி ஆகிய ஆறு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே நாளில் 4 பேர் கைது - தூத்துக்குடி SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

469 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami