883
Read Time57 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையினை முடித்த பிறகு தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்றார்.
சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது. கடமை தவறாது தாய்நாடு மீது பற்று மிகுந்த காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப அவர்கள்.