தென் மண்டல காவல்துறை சார்பாக வீரமரணமடைந்த  சுப்பிரமணியன் வீட்டிற்கு 86 லட்சம் நிதியுதவி, ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப வழங்கினார்

Admin
0 0
Read Time2 Minute, 26 Second
தூத்துக்குடி : வெடிகுண்டு வீச்சில் வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன, இ.கா.ப அவர்கள் நேரில் சென்று தென் மண்டல காவலதுறை சார்பாக ரூபாய் 86,50,000/- நிதியுதவி வழங்கினார்.
கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணமடைந்தார்.
அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. முருகன், இ.கா.ப அவர்களின் சீரிய முயற்சி மற்றும் அறிவுறுத்தலின் பேரில், தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு பெறப்பட்டது.
அந்த பங்களிப்பு ரூபாய் 86,50,000/-த்தை இன்று (31.08.2020) மதுரை தென் மண்டல ஐ.ஜி அவர்கள் தலைமையில் திருநெல்வேலி டிஐஜி திரு பிரவீன்குமார் அபிநபு,IPS மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. திரு.ஜெயக்குமார், ஆகியோருடன் பண்டார விளையில் உள்ள காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
காவலர் சுப்பிரமணி மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும். அவரை இழந்த தங்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் ஐஜி முருகன் தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் நிலையம் இருளில் மூழ்கியது, விருதுநகர் SP விசாரணை

344 விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami