கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 நபர்கள் மீது வழக்கு.

Admin
1 0
Read Time2 Minute, 5 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரக்கூடிய 8 வழிகளையும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கடல் வழியாக படகில் வந்த 7 நபர்கள் கரையில் இறங்கி வேளாங்கண்ணிக்கு நுழைய முயன்றனர். உடனடியாக மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தாங்கள் வந்த காரை வேளாங்கண்ணிக்கு வெளியே ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து செருதூர் கடல் பகுதி வழியாக படகில் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தர்சிக முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடல் வழியாக வந்த அந்த 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முழு ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் 1500 சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

894 சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami