பட்டீஸ்வரம் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த கும்பலை 12-மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் போலீசார்.

Admin
2 0
Read Time1 Minute, 35 Second

தஞ்சாவூர் : கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சரகத்தில் நேற்று ( 3.9.2020 ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் தேனாம்படுகை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து உள்ளே சென்று மது பாட்டில்கள், பணம் ஆகியவற்றைகொள்ளை அடித்து சென்ற தகவலின் அடிப்படையில் கும்பகோணம் (பட்டிஸ்வரம் )போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டார்கள் இதில் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள்
1) பூ விக்கி @ விக்னேஷ் 2) அருண்குமார் 3) பாசில் 4) பாலமுருகன் 5) அலெக்ஸ் 6) மோசஸ் ஆகியோர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து கும்பகோணம் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.

தப்பி ஓடிய மேலும் 1 நபரை தேடி வருகின்றனர். குற்றம் நடந்த 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கும்பகோணம் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் இதனை தஞ்சை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இப்பகுதி போதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை அதிரடி நடவடிக்கை: வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

729 அரியலூர் : அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் அருகே கடந்த மாதம் பங்காளிகளுக்கு இடையேயான இட பிரச்சினையை சமாதானம் செய்ய முயன்ற உறவினர் மீது தாக்குதல் நடத்தி, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami