தமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.

Admin
3 0
Read Time3 Minute, 28 Second

தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர் திரு.சரவணன் அவர்கள் மலைவாழ் மக்களையும் சந்தித்து பேசினார். அப்பொழுது 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் எனது உடம்பில் போதுமான இரத்தம் இல்லை, எனது உடம்பு மிகவும் சோர்வாக உள்ளது ஏதேனும் உதவி கிடைக்குமா சார் என கேட்ட போது சற்றும் தாமதிக்காமல் உடனே ஒரு ஆட்டோவில் அப்பெண்மணியை ஏற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் சேர்த்தார். இதனையடுத்து அப்பெண்ணிற்கு O-positive இரத்தம் வேண்டும் என மருத்துவர்கள் கூறியதன் பேரில் உடனடியாக தனது நண்பரை வரவழைத்து இரத்தம் பெற்று அப்பெண்ணிற்கு உதவினார். அந்த கர்ப்பிணி பெண் முழு சிகிச்சை பெற்று உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதை அறிந்ததும் தலைமைக் காவலர் மன மகிழ்ந்தார். கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவிய தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தனர்.


உதிரம் கொடுத்து உயிரைக் காத்த திருநெல்வேலி மாவட்ட உதவி ஆய்வாளர்.

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்த சகாயம் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய B Nagative இரத்தம் தேவைப்படுவதாக கூறினர்.அப்போது அவரது உறவினர் அருள் அவர்கள் தாய் தமிழ் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு தனது உறவினர்க்கு இரத்தம் தேவைப்படுவதாக கூறினார். தாய் தமிழ் அறக்கட்டளையினர் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆய்வாளர் திரு வாசுதேவன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு ரத்தம் தேவைப்படுகிறது என்று கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக தருகிறேன் என்று கூறி மருத்துவமனைக்கு சென்று இரத்தம் வழங்கினார். இதன் மூலம் உடல்நிலை சரியில்லாத நபர் முழு சிகிச்சை பெற்று உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதை அறிந்ததும் உதவி ஆய்வாளர் மனம் மகிழ்ந்தார்.
உடல்நிலை சரியில்லாத நபருக்கு இரத்தம் வழங்கி உதவிய திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு சகாயத்தின் குடும்பத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோ டிரைவர் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கிய நெல்லை காவல் துணை ஆணையர்

632 நெல்லை : நெல்லை சந்திப்பு மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami