Read Time1 Minute, 19 Second
தூத்துக்குடி : திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலரை நேரில் சென்று நலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் விசாரித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக பணி புரியும் திருமதி. சண்முகத்தாய் என்பவர் நேற்று(03.10.2020) இரவு புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பாரா அலுவலில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேற்படி பெண் காவலரை இன்று (04.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.