காவலர் வீரவணக்க நாள், கோவை மாநகர காவல் ஆணையர் அஞ்சலி

Admin
0 0
Read Time1 Minute, 45 Second

கோவை : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண்,  இ.கா.ப அவர்களின் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் கவாத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர கூடுதல் காவல் ஆணையர்கள், துணை காவல் ஆணையர்கள், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு சூழ்நிலைகளில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் வீரவணக்க நாள் - திண்டுக்கல் DIG முத்துசாமி தலைமையில் மரியாதை

384 திண்டுக்கல்  : காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில், திண்டுக்கல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami