Read Time1 Minute, 32 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தேனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகள் சமிக்ஞை விழும் நேரத்தை வினாடிகளில் தெரிந்துகொண்டு விபத்து ஏற்படா வண்ணம் சாலையை கடக்கும் வகையில் டிஜிட்டல் திரையுடன் கூடிய நவீன போக்குவரத்து சமிக்ஞை விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, இலவச முகக் கவசம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.