கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 45 Second

சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் வலிப்பு வந்து கீழே விழுந்த கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல் நிலை பெண் காவலரை, காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். கடந்த 21.10.2020 அன்று மதியம் 12.30 மணியளவில் கோயம்பேடு மார்க்கெட் 7வது கேட் அருகில் மூட்டை தூக்கும் தொழிலாளி லட்சுமணன் வ/35 என்பவர் வலிப்பு வந்து கீழே விழுந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திருமதி. முத்துகிருஷ்ணவேணி (மு.நி.கா.43675) என்பவர் விரைந்து சென்று, லட்சுமணனுக்கு தகுந்த முதலுதவி சிகிச்சை செய்து, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக KMC அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேற்படி சம்பவத்தின்போது சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை பெண். காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 23.10.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்

542 சென்னை:  சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட  மாதவரம் துணை ஆணையராக பொறுப்பேற்று 15 நாட்களில் 700 கிலோ கஞ்சாவை எனும் போதை பொருகளை கைப்பற்றியுள்ளார். இதன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami