பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் புதியதோர் உதயம்

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி இன்று 20.11.2020-ம் தேதி பெரம்பலூர் – துறையூர் செல்லும் சாலையிலுள்ள போக்குவரத்து காவல் நிலையதில் புதியதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி பள்ளியை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த பயிற்சி பள்ளியில் சாலை விதிகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள், சாலையில் வாகனத்தில் செல்லும்போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை, சாலையிலுள்ள எச்சரிக்கை சின்னங்கள் போன்றவைகள் உள்ளன. சாலையில் விதிமீறுவோர்களுக்கு இப்பள்ளியில் சாலை விழிப்புணர்வு குறித்த பயிற்சி வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.பாலமுருகன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பராமன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பால்ராஜ், ஊர்க்காவல்படை மண்டல தளபதி திரு.ராம்குமார், ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை

492 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியினை அரக்கோணம் DSP திரு. மனோகரன் கொடி அசைத்து தொடங்கி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami