தல்லாகுளம் போலீசார் கஞ்சா வேட்டை ! கைது ?

Admin
0 0
Read Time1 Minute, 51 Second

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS,  அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகருக்குள் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியிலும், குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் விரைவாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  மதுரையில் அதிகரித்து அதிகரித்து வரும் கஞ்சா பழக்கத்தினால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளத்தை அடுத்த பீ.பி.குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், விக்னேஷ்பாண்டி, பிரவீன்குமார், சத்யராஜ், சந்தோஷ் உள்ளிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

காவல் ஆய்வாளராக திரு.மலைச்சாமி அவர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பேற்றதில் இருந்து, அவரின் விரைவான நடவடிக்கையால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று வருகின்றார்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை அருகே சேவல் சண்டை சூதாட்டம் 9 பேர் கைது

368 கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன் பாளையத்தில ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சூலூர் போலீசுக்கு நேற்றுமாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami