போலி ரசீது மூலம் ரூ.25½ கோடி வரி ஏய்ப்பு: தொழில் அதிபர் கைது

Admin
0 0
Read Time2 Minute, 12 Second
கோவை : இரும்பு பொருட்களை அனுப்பியதுபோல் போலி ரசீது மூலம் ரூ.25½ கோடி வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். கோவை மண்டல ஜி.எஸ்.டி. புலனாய்வு அலுவலகத்துக்கு உள்பட்ட ஓசூர் பிரிவு ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ஒசூரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 19-ந் தேதி ஒசூரில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.141 கோடி மதிப்பில் இரும்பு பொருட்களை ஒசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியது போலவும், ஜி.எஸ்.டி. செலுத்தியது போலவும் போலியாக ரசீது தயாரித்து உள்ளனர். இதன் மூலம் ரூ.25 கோடியே 40 லட்சத்தை அந்த தொழில் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவன தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இந்த சோதனையின் போது போலி ரசீது புத்தகம், காசோலை புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில், தனக்கு வேண்டியவர்களின் பெயரில் 5 விதமாக ஜி.எஸ்.டி. எண்களை பதிவு செய்தும், உறவினர்கள், நண்பர்களின் ‘பான்’ எண்களை கொண்டு பொருட்களை அனுப்பாமல் வரி ஏய்ப்பு செய்ததும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் உள்பட 5 பேரிடம் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 66 வியாபாரிகள் கைது

819 கோவை : கோவையில் உள்ள சில மளிகைகடைகளிலும் பெட்டி கடைகளிலும்தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami