Read Time1 Minute, 16 Second
மதுரை : முன்விரோதத்தில் வீட்டின் கதவை உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை பீபிகுளம் காந்திஜிதெருவைச் சேர்ந்தவர் மாலதி ( 35 ) இவர் வீட்டில் தனியாக இருந்த போது திருப்புவனத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (24 ) மற்றும் மதுரை பீபீ குளம் காந்திஜி தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி ( 54 ) இவர்களுடன் மேலும் இரண்டு பேர் திடீரென்று கடப்பாரையுடன் வந்து பட்டப்பகலில் மாலதி வீட்டின் கதவை உடைக்க தொடங்கினர் .இதை தட்டி கேட்ட மாலதியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசில் மாலதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ் (24 ) மகாலட்சுமி ( 54 )ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்