மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்

Admin
0 0
Read Time4 Minute, 21 Second

சென்னை: கொரானா இன்று உலகை அச்சுறுத்தி வரும் பெயர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் இன்று 13 லட்சத்திற்கு மேற்பட்டோரின் உயிரை குடித்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 34ஆயிரம் நபர்கள் கொரானா தோற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 11, 500 பேர் இதுவரை கொரானாவிற்கு பலியாகி உள்ளனர்.

கொரானா நோய் தொற்றிற்கு மருந்து அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படாத வரை, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமே, நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். அதற்காக தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படக்கூடிய கபசுர குடிநீர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கபசுர குடிநீரும், முககவசமும் நம் காவல்துறையினரின் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தமிழகத்தில் கொரானா குறைய துவங்கியுள்ளது.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நேற்று (22.11.2020) காலை 8:30 மணியளவில், தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சேர்ந்து அறிவுறுத்திய கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்தும் 15 வகை அரிய மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சித்தமருந்து கபசுர குடிநீர் சமூக இடைவெளி வட்டமிட்டு மக்களை வரிசைப்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்பு 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முக கவசமும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வழங்கப்பட்டது. சிறுவர் சிறுமிகளுக்கு கபசுர குடிநீர்வுடன் முக கவசம் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்த சிறப்பு அழைப்பாளர் W-30 அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் (காவல் ஆய்வாளர்) K.ஜோதிலட்சுமி மற்றும் S.வச்சலா, T.வேல்விழி ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கினர். காவல்துறையின் சிரமமான அலுவல் பணிகளுக்கிடைய போலீஸ் நியூஸ் பிளசுடன் இணைந்து மக்கள்சேவையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் அனைத்து முக கவசம் அணிவதின் முக்கியத்துவத்தையும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.



About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"நிவர் புயல்" மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்

332 சென்னை: நிவர் புயல் மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. J.K. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami