13 ரவுடிகள் ஓட ஓட கைது? மதுரையில் தனிப்படையினர் அதிரடி

Admin
1 0
Read Time3 Minute, 44 Second

மதுரை : மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹோ,IPS அவர்கள் உத்தரவின் பேரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 ரவுடிகள் தனிப்படை காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா,IPS அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக 7 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை ஒருவர் விடாமல் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த தனிப்படையை சட்டம்ஒழுங்கு துணை கமிஷனர் திரு.சிவபிரசாத் கண்காணித்து வருகிறார். மதுரையில் அனைத்து பகுதிகளிலும் இந்த 7 தனிப்படைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடியாக ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்‌.

இவ்வாறாக வைகை வடகரை மதீனா பள்ளிவாசல் அருகே பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்கள் உள்பட ஒன்பது ரவுடிகளை கைது செய்து அவர்களிடமிருந்து வாள் அரிவாள் இரண்டு கத்திகள் துண்டுகள் மிளகாய் பொடி பாக்கெட் மூன்று இவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு வைகை வடகரை கள்ளுக்கடை சந்துவை சேர்ந்த பாண்டி மகன் மணி பாண்டி (23 ) ரவுடி ஆவார் இஅதேபகுதியைசேர்ந்த முத்துராமன் மகன் சதீஷ் என்ற சுருட்டை சதீஷ் ( 22 )இமீனாட்சி சுந்தரம் என்ற மெட்ராஸ் இ மற்றொருவர் (17) வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர். மற்றொரு நபர் முகேஷ் என்ற மூக்கன் ( 21) மற்றொருவர் (17) வயது சிறுவன் அடுத்ததாக கைது செய்யப்பட்டவரும் 17 வயது சிறுவன் அவரைதொடர்ந்து பிரபாகரன் மகன் நாகேஸ்வரன் என்ற நாகேஷ் (19) இசூர்யா என்ற போக்கிரி ( 24 ) .ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இதுபோலமஸ்த்ன்பட்டி ஆலமரம் அருகே பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர் .அவர்கள் பெயர் வருமாறு வண்டியூர் சங்கு நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (25இ) காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சேர்ந்தூர் மகன் துரைமுருகன் (25இ )காமராஜபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராமர் (24இ) காமராஜபுரம் குமரன் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் திருப்பதி ( 40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும். அவர்களுடன் இருந்த காமராஜர் கக்கன் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்து மணி (24 ) . காமராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் மகன் நல்லுசாமி ( 25) இந்த இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பீளமேடு காவல் ஆய்வாளரின் பேருதவிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெண்

763 கோவை: காவல்துறையினர் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வந்தாலும் காவல்துறையில் பணிபுரியும் அநேக காவலர்கள் மனிதாபிமானத்திற்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் கோவை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami