துரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்

Admin
1 0
Read Time2 Minute, 39 Second

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 29.05.2014 அன்று தூத்துக்குடி மடத்தூர் மெயின்ரோடு P&T காலனியைச் சேர்ந்த சிவதாணு மகன் சங்கர் (42) என்பவர் தனது மனைவி கோகிலா (26/2014) மற்றும் தனது மகள் புவனா என்ற அட்சயா (03/2014) ஆகியோரை குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இவ்வழக்கை சிப்காட் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி பாண்டியராஜன் அவர்கள் இன்று (01.12.2020) குற்றவாளி சங்கர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் (தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்) இவ்வழக்கின் சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு விரைவாக தண்டணை வாங்கி கொடுக்க ஆவண செய்த தற்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் இளமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பாராட்டினார்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்

497 தூத்துக்குடி: தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகளை” (Raincoat) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami