பிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை

Admin
0 0
Read Time1 Minute, 45 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று (01.12.2020) பயிற்சி நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் கவாத்து பயிற்சி மற்றும் சட்டம் ஒழுங்கு பாடத் தேர்வில் சிறந்து விளங்கிய பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி காவல்துறையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.M.S.முத்துசாமி இ.கா.ப அவர்களும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 ஆம் அணியில் உள்ள ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்களின் குடும்பத்தார்களும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்

திரு.மீரா மைதீன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன மழையின் காரணமாக  வீடு இடிந்து இருவர் பலி

374 தஞ்சை: கும்பகோணத்தில் பெய்து வரும் கனமழையினால் கும்பகோணம் தாழுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட எலுமிச்சங்கா பாளையம் சிவஜோதி நகரில் உள்ள ஓட்டு வீடு ஒன்று (3-12-2020) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami