25 காவல் அதிகாரிகளுக்கு வாழ்த்து

Admin
0 0
Read Time2 Minute, 23 Second
சென்னை : கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் சென்னை பெருநகர காவல்துறையினர் இதுவரை 3,165 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , 3,097 காவல் ஆளிநர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர் . பணியின்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த இணை ஆணையாளர் ( கிழக்கு மண்டலம் ) திரு.சுதாகர் , இ.கா.ப , அவர்கள் பூரண குணமடைந்து இன்று (09.12.2020 ) பணிக்கு திரும்பினார் .
மேலும் , போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு.ஜெயகரன் சாமுவேல் , காவல் ஆய்வாளர் வி.ஸ்ரீதேவி , உள்ளிட்ட 25 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குணமடைந்து பணிக்கு வந்தவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் , வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் வரவேற்று உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியதற்காக பூங்கொத்து வழங்கி சான்றிதழ்கள் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்து , பாராட்டினார் . மேலும் , காவல் ஆணையாளர் அவர்கள் , கபசுர குடிநீரை காவல்துறையினருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் A. அமல்ராஜ் , இ.கா.ப. , (தலைமையிடம் ) , முனைவர் R. தினகரன் , இ.கா.ப. , (தெற்கு ) , மருத்துவர் N. கண்ணன் , இ.கா.ப. (போக்குவரத்து ) , திருமதி . P.C. தேன்மொழி , இ.கா.ப. , (மத்திய குற்றப்பிரிவு ) , இணை ஆணையாளர்கள் , துணை ஆணையாளர்கள் , உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய நெடுஞ்சாலையில் லாரி விபத்து, போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்த உதவி ஆய்வாளர்

381 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் லாரி குறுக்கே கார் வந்ததால் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami