Read Time58 Second
தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசார்க்கு அரிவாள் வெட்டு, குற்றவாளி தப்பி ஓட்டம், இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஊர்மேனி அழகியான் புரத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பால்தினகரன் (30), இவனை பிடிக்க சென்ற காவலர் சக்திவேல்லை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். படுகாயம் அடைந்த காவலரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்