காவலர்களை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 41 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 35 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜூ, அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற காவலர்

934 தேனி : தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami