Read Time1 Minute, 30 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அச்சத்தையும்,பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி கடந்த 19.12.2020 தேதி உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அச்சத்தையும் பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்ஸர் பொருத்திய வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்தார்கள். அவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டன.
பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகள் குறைந்த ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர்களை மாற்றி அமைத்த வாகனங்கள் மட்டும் வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 19.12.2020- ம் தேதி முதல் 23.12.2020- ம் தேதி நேற்றுவரை 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி