கள்ளச் சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

Admin
1 0
Read Time1 Minute, 32 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கிளியப்பட்டு அஞ்சல், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சரஸ்வதி, வயது 40 என்பவர் சுமார் 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக, திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார். மேற்கண்ட நபர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி.IAS., அவர்கள் சரஸ்வதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 138 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோவில்பதுங்கியிருந்த 2 பேர் கைது

732 மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami