Read Time1 Minute, 5 Second
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் திருமதி.சகாயராணி அவர்கள் சின்னையம்பேட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஆடை சரிவரயில்லாமல் இருந்ததை கண்டதும் உடனடியாக அவருக்கு மாற்று உடை வாங்கி அணிவித்து உண்ண உணவு வாங்கித் கொடுத்தார். மேலும் அப்பெண்ணிடம் இருந்த அடையாள அட்டையில் இருந்த முகவரி மூலம் அவரின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை வரவழைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தார். பெண் காவலரின் மனிதநேய செயலை தமிழக காவல்துறை பாராட்டுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்