Read Time1 Minute, 9 Second
மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார்.
மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சந்துரு 13 .இவர்வீட்டில் சேலையைவைத்து விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்தில் சேலைசுற்றி மயங்கி விழுந்துவிட்டார்.. அவரை உடனடியாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன்சந்துருபரிதாபமாக உயிரிழந்தார்.இந்தசம்பவம் குறித்து அப்பா சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி