Read Time2 Minute, 16 Second
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 11 காவல் அலுவலர்கள் பல்வேறு மன அழுத்தம் காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி காவல் பணியை செய்யமுடியாத நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தநிலையில் அவர்களின் உடல்நலன், குடும்பத்தினரின் எதிர்காலம் மற்றும் காவல்துறையின் கண்ணியம் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS, அவர்கள் மேற்படி அனைவரையும் மீட்டு மீண்டும்
காவல் பணியில் சிறப்பாக ஈடுபடுத்த சீரிய முயற்சி செய்து 11 காவல் அலுவலர்களையும் அவர்களது குடும்பத்துடன் மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி ஒப்புதல் பெற்று மேற்படி அனைவரையும் திருவாருர் காட்டூர் என்ற பகுதியில் அமைந்துள்ள பாரதி மறுவாழ்வு மையத்தில் 30-நாட்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில் தொடர்ந்து வாழ்வியல் பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று(12.01.21)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அந்த மையத்திற்கு சென்று அனைவரையும் சந்தித்து
பேசி உடல்நிலை முன்னேற்றம் குறித்து ஆய்வுசெய்து அறிவுரை வழங்கினார்கள்.
சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் காவல் பணிக்கு வருவோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா