452
Read Time1 Minute, 9 Second
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசைத்தம்பி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. கற்பகம் அவர்கள் கைது செய்தார். மேற்படி குற்றவாளிக்கு கிருஷ்ணகிரி மகிளா விரைவு நீதிமன்றம் 39 வருடம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் திருமதி. கற்பகம் அவர்களை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்