திண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை

Admin
0 0
Read Time1 Minute, 41 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2021- ம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையில் 10 வருடங்கள் எந்த ஒரு தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த 70 காவல்துறையினருக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் மெச்சத்தக்க பணிபுரிந்த 27 காவல்துறையினருக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்

514 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami