Read Time1 Minute, 46 Second
இராமநாதபுரம் : விருதுநகர் மாவட்டம் வீரசோழன் வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் என்பவர் கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்ததால் முதுகுளத்தூர் காவல் நிலைய குற்ற எண்: 613/2020 u/s 8(c) r/w 20(b)(11)(C),25, 27A, 29 (1) NDPS Act & 20 r/w 30 Arms ACT-ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மேற்படி நபர் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.
இதன்படி முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் (26.01.2021) மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்