தமிழக DGP இல்ல திருமண விழாவில் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து

Admin
0 0
Read Time6 Minute, 45 Second

சென்னை: சென்னையில் நேற்று காவல்துறை அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன் ஜீத்வன் மற்றும் சுமுகி ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் கலந்துகொண்டு மணமக்கள் மற்றும் டிஜிபி திரிபாதி அவர்களை பூச்செண்டுடன் வாழ்த்தினார்.

தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டி போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்களுக்கு, தமிழக டிஜிபி அன்பான வரவேற்பு அளித்தார். அவர் நல்ல விருந்து அளித்து உபசரித்தார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் கூறுகையில், டிஜிபி எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். இது ஊடக சமூகத்திற்கு அவர் அளித்த பெரும் மரியாதையாக இருந்தது. புதிதாக திருமணமான தம்பதியரை வாழ்த்தினதாக பெருமிதத்துடன் கூறினார்.

தற்போது, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள திரு.திரிபாதி, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றி காவல்துறை சட்டம், ஒழுங்கு பணிகளில் பழுத்த அனுபவம் கொண்டவர். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, கிரைம் ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்தவர். தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான சர்வதேச விருதை ப் பெற்ற ஒரே ஐபிஎஸ் அதிகாரி திரு.திரிபாதி,IPS மட்டுமே.

திரு.திரிபாதியின் சிறந்த பணியை பாராட்டி “Innovation in Governance” என்ற தங்க பதக்கத்தை ஸ்காட்லாண்டு அரசு வழங்கி கவுரவித்தது. அதே போல வாஷிங்டன் அரசும் திரு. திரிபாதியின் பணியை பாராட்டி ‘‘International Community Policing Award” என்ற பதக்கத்தை வழங்கியது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளில் இன்டர்நேஷனல் விருது வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையும் திரு.திரிபாதியை மட்டுமே சேரும்.

அதே போல திரிபாதியின் சிறப்பான காவல்பணியை பாராட்டி மத்திய அரசு 2001ம் ஆண்டு மெச்சத்தகுந்த பணிக்கான ஜனாதிபதி பதக்கமும், 2008ம் ஆண்டு பாரதப் பிரதமரின் பதக்கமும், 2002ம் ஆண்டு இந்திய அளவிலா உயர்ந்த பதக்கங்களான டாக்டர் மால்கம் எஸ்.ஆதிசேஷையா போன்ற சிறப்பு பதக்கங்களையும் பெற்றுள்ளார். மேலும் பிரதமரின் பதக்கத்தை பெற்ற முதல் இந்திய ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையும் திரிபாதியையே சாரும்.

திரிபாதி டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர் 1985 ஆண்டு பேச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவரது பூர்வீகம் ஒடிசா. சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம் இருந்தது. வீட்டில் நிறைய கேமராக்கள் வைத்துள்ளார். இவரது மனைவி திருமதி.அனுஜா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் நிறைய கதைகள் எழுதியுள்ளார். மேலும் சமூக சேவையிலும் அதிக நாட்டம் உள்ளவர்.

திரு. திரிபாதி முப்பது ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாநில போலீசாருக்கு சேவை ஆற்றியுள்ளார். திருச்சியின் போலீஸ் கமிஷனராக இருந்த காலம் முழுவதும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் குற்றங்களைத் தடுக்க புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் ரோந்து காவல் படை, குடிசைப்பகுதிகளை தத்து எடுக்கும் திட்டம் மற்றும் புகார் பெட்டி திட்டம் போன்ற புதிய திட்டங்களை காவல்துறையில் அறிமுகப்படுத்தினார்.

சென்னையை கலங்கடித்த தாதா வீரமணியை அப்போதைய சென்னை கமிஷனர் விஜயகுமாரின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் என்கவுன்டர் நடத்தினார். அதன் பின்னர் 2012ம் ஆண்டு வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்டர் செய்தது போன்ற சம்பவங்கள் திரிபாதியின் துணிச்சலுக்கு சிறந்த உதாரணம்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பியாக பணியாற்றிய போது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள கைதிகளின் மறுவாழ்வுக்காக மகாத்மா காந்தி கம்யூனிட்டி கல்லூரியை தொடங்கி வைத்தார். மேலும், சிறைகளில் உள்ள 15 ஆயிரம் கைதிகளையும் அவர் சிறப்பாக கையாண்டார். அவ்வப்போது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். சிறைக்கைதிகளுக்கு ப்படிப்பதற்கும், பல்வேறு தொழில் திறன்களைக் கற்றுக் கொடுக்கவும், சிறைவாசிகள் வெளியே வந்து வேலை செய்து பிழைக்கவும் பல்வேறு வசதிகளை அவர் வழங்கினார்.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ADSP உடலை சுமந்து சென்ற DIG மற்றும் SP

595 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.U. முருகேஷ் அவர்களின் பூத உடலுக்கு மத்திய மண்டல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami