நவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வரும் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 49 Second

மதுரை : மதுரை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் SPEED RADAR GUN மூலமாக அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். ஒவ்வொரு சாலைகளுக்கும் வேகக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டு, மதுரை மாநகருக்குள் 30km வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் 50km வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 80km வேகத்திலும் செல்லும்படி மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வேக கட்டுப்பாடு எச்சரிக்கை உத்தரவு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளது. SPEED RADAR GUN ஆனது எதிரே வரக்கூடிய வாகனத்தினை Zoom செய்து வாகனத்தின் வேகத்தை ரேடார் தன்மையின் மூலம் வாகனத்தில் கதிர்கள் மோதி மீண்டும் கருவிக்கு reflect ஆகி வாகனத்தின் வேகத்தை துல்லியமாக கணித்து கொடுக்கும் தன்மை கொண்டது. இக்கருவியை வைத்து சாலையின் வேகக்கட்டுப்பாட்டு எல்லையை பதிவு செய்யும் போது எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் வந்துள்ளது என்பதனை துல்லியமாக பதிவு செய்துவிடும். இதன் மூலம் அதிகமான வேகத்தில் செல்பவர்களை விரைவில் அடையாளம் காண உதவுகிறது. எனவே அதிவேக பயணத்தை தவிர்க்கும்படி காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நொளம்பூர் காவல் நிலையத்திற்கு ஆணையர் பாராட்டு

809 சென்னை : குமரேசன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வ / 30 என்பவர் நேற்று ( 04.02.2021 ) நள்ளிரவு நொளம்பூர் பகுதியில் டீ […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami