திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கணேஷ் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக பதிவு கட்டணமாக ரூ 1500/- செலுத்திய நிலையில் அவருக்கு வேலை வாய்ப்புகள் பிடிக்காததால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் மேலாளரை வெறுப்பின் காரணமாக அசிங்கப்படுத்தும் விதமாக, முகநூல் பக்கத்தில் பெண் மேலாளரின் தொலைபேசி என்னை பதிவேற்றம் செய்ததாகவும், அதனால் தனக்கு தகாத முறையில் தொலைபேசி மூலம் பலர் தொந்தரவு செய்வதாகவும் 19-11-2020 ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் மனுதாரரர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு 15-02-2021 ம் தேதியன்று குற்றவாளி முத்து கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அசிங்கப்படுத்தும் விதத்தில் முகநூல் மூலம் செய்தி பரப்பிய நபர் மீது போலீசாரின் துரித செயல்பாடு

Read Time1 Minute, 27 Second