மதுரை திருப்பாவையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை
மதுரை பிப்28 திருப்பாலையில்வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பாலை கண்ணனேந்தல் மெயின் ரோடு கோகுல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் 71 இவர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25000/- கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிவேல் திருப்பாலை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
**********
மதுரை திருப்பாலையில் வீட்டை உடைத்து தங்க வைர நகைகள் கொள்ளை, போலீஸ் விசாரணை
மதுரை.பிப்28. திருப்பாலையில் வீட்டை உடைத்து தங்க வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகினறனர்.
மதுரை திருப்பாலை பொன்விழா நகர் மெயின் ரோடு பகுதியை சேரநதவர் திருமுருகன் மகன் சக்திவேல்25. இவர்குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைககப்படடிருந்தது. வீடடில் பீரோவில் வைத்திருந்த தங்க வைர நகைகள் பத்தே கால் பவுனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக சக்திவேலன் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
*********
மதுரை பறவைமார்கெட்டில் வெங்காயம் திருடிய மூன்று பேர் கைது
மதுரை.பிப்28. பறவைமார்கெட்டில் வெஙகாயம்திருடிய மூன்று பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். மதுரை அன்புநகர் அன்னை அபிராமி தெருவை சேர்ந்தவர் அக்பர்43. இவர் பறவை மார்க்கெட்டில் வெங்காயம் வியாபாரம் செய்துவருகிறார். இவர் அங்கு அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளை சிலர் திருடிக்கொண்டிருந்தபோது, அவர்களை சுற்றி வளைத்து கையுமகளவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்களை கூடலபுதூர் போலீசில் ஒப்படைததனர்.போலீசார் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெரியகுளம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் ராஜேஸ்குமார் 30, கந்தசாமி மகன் மாசானகுமார் 28,அமானுல்லா மகன் எதிரிஷ்21, என்பது தெரிய வநதது. அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் திருடிய ஐம்பது கிலோ வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.
********
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி