2 கோடி மோசடி செய்த நபர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Admin
0 0
Read Time6 Minute, 4 Second
கோவை : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டி ஆர் டி ஏ என்று அழைக்கப்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் டெண்டர் மூலம் பணிகளை எடுத்து மூன்று சக்கர குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான கொட்டகை அமைக்கும் பணிகளை செய்து வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு இதற்குரிய டெண்டரை எடுத்த ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் ஆப்செட் நிறுவனத்தின் உரிமையாளர் சி.கே. ஞானவேல் இதற்குரிய பணிகளை கோவை பொள்ளாச்சி சாலையில் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் என்ற நிறுவனத்திற்கு கொடுத்தார். இதற்குரிய ஜாப் ஆர்டர் உத்தரவு நகல் மற்றும் எவ்வளவு காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் அதற்குரிய லாபம் என எல்லா விவரங்களையும் குறித்த உத்தரவு கடிதத்தை சி.கே. ஞானவேல் பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் நிறுவனத்தின் இயக்குனர் சுதாகரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து அதற்குரிய பணிகளை சுதாகர் தனது நிறுவன ஊழியர்களை கொண்டு செய்து வந்தார். இப்படி மூன்றாண்டுகள் பணிகளை பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் நிறுவனத்தினர் செய்துவந்த நிலையில் கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான கொட்டகை அமைத்துக் கொடுத்த பணத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 407 ரூபாயை கொடுக்காமல் ஞானவேல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.மேலும் அரசிடம் இருந்து இன்னும் பணம் வரவில்லை.இன்னும் சிறிது நாளில் பணம் வந்து விடும் என்று சி.கே.ஞானவேல் கூறியதை பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் பங்குதாரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நம்பி வந்தனர். இதையடுத்து இதேபோல மூன்று சக்கர குப்பை வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்கிய வகையில் 96 லட்சம் ரூபாயும் மற்ற பணிகள் செய்த வகையில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயும் என மொத்தமாக 3 கோடியே 76 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தனர்.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதாகர் மற்றும் அவரது பங்குதாரர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலமுறை ஞான வேலை அணுகி பணத்தை கேட்ட பொழுது சுமார் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாயை மட்டும் பல தவணைகளாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் அரசிடமிருந்து எனக்கு பணம் வரவில்லை என்று கூறி வந்தார் .இதை அடுத்து சுதாகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது பணம் அனைத்தும் ஸ்ரீ சக்ரா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற தகவலை கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் மற்றும் ராதாகிருஷ்ணன் தாராபுரத்தில் உள்ள சி.கே.ஞானவேல் அலுவலகத்திற்கு சென்று கேட்டனர்.

அப்போது ஞானவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பணம் கொடுக்க முடியாது என்றும் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். மேலும் ஞானவேல் புதிதாக பிரியம் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் என்ற பெயரில் புதிதாக நிறுவனத்தைத் தொடங்கி இதே போன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதை அறிந்தனர்.இதையடுத்து சுதாகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஸ்ரீசக்கரா கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வந்த சி.கே.ஞானவேல் அரசிடம் இருந்து பணத்தை வாங்கி அதை பணி செய்த நிறுவனத்திற்கு தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் நிறுவன சி.கே.ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கால்நடை கொட்டகை அமைக்கும் திட்டத்தில் ஒதுக்கிய பணத்தை வாங்கிய நிறுவனம் அதை பணி செய்த நிறுவனத்திற்கு கொடுக்காமல் சுமார் இரண்டு கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிங்காநல்லூரில் கொள்ளை 4 பேருக்கு வலை வீச்சு

494 கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் உள்ள இபி காலனியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் திவேஷ்வர் வயது 20. இவர் கோவை சிங்காநல்லூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami