இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 17/03/2021

Admin
0 0
Read Time3 Minute, 16 Second

சென்னை : சென்னை மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனார். தாக்குதலில் காயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து ராஜனின் உறவினர் டேவிட் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் காயமடைந்த ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் 06.03.2021 அன்று இறந்து விட்டதால் மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளி பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன், வ/29, மாத்தூர் என்பவரை கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் , வ/32, காசிமேடு என்பவரை 16.03.2021 அன்று M-2 மாதவரம் பால்பண்ணை காவல் குழுவினர் கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


வானகரத்தைச் சேர்ந்த, சந்தோஷ்ராம், வ/33, என்பவர் 15.3.2021 அன்று பணிமுடித்து வீட்டிற்கு செல்ல ராஜாகுப்பம் , இன்டஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சந்தோஷ்ராமின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபர்களை உடனே சந்தோஷ்ராமும் அருகிலிருந்தவர்களும் துரத்திச் சென்று இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த குற்றவாளியை பிடித்தனர், தகவலறிந்த T – 5 திருவேற்காடு காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து விசாரணை செய்தனர். T – 5 திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து பிடிபட்ட நபர் அருண், வ/26, திண்டுக்கல் என கண்டறிந்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாணவிக்கு விருது வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்

988 திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami