மதுரை முக்கிய கிரைம்ஸ் 22/03/2021

Admin
0 0
Read Time5 Minute, 12 Second

திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே உமச்சிகுளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 43 .இவர் ஜெய்ஹிந்துபுரம் சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெருவில் இரண்டு மாதங்களாக ஒர்க் ஷாப் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 நாட்களுக்கு முன்பு ஒர்க்ஷாப்பில் வைத்திருந்த பணம் திருடு போனது தொடர்பாக அவர் மீதுதிருட்டு குற்றம் சாட்டப்பட்டு அவருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த ஒர்க்ஷாப் அருகே தமிழ்ச்செல்வன்மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் கதிரேசன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தம்பி தமிழ்செல்வனின் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இரண்டாவது திருமணமும் டைவர்ஸ்ஆனதால் மனமுடைந்தவாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

மதுரை மதுரைநரிமேட்டில் இரண்டாவது திருமணமும் டைவர்ஸ்ஆனதால் மனமுடைந்த வாலிபர்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை நரிமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராபர்ட்ஆசிர்வாதம் மகன் சாமுவேல் தங்கராஜ் 39. இவருடைய முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணத்தையும் டைவர்ஸ்செய்து விட்டார் .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய அம்மா புஷ்பவல்லி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை முயற்சியில்வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர் கைது

மதுரை தத்தநேரியில் கொலை முயற்சியில் வாளுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தநேரி கலத்துப்போட்டல் பின்புறமாக கொலை முயற்சி எண்ணத்துடன் வாலிபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.செல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகாமாட்சி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த தத்தநேரி கலத்துப்பொட்டல் வ.உ.சி இரண்டாவது தெருவைச் சேர்ந்த முத்து பாண்டி மகன் விஷ்ணு என்ற மூன்றுமண்டையன் 19 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.


ஆரப்பாளையம் டவுன் பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் நகை பணம் திருட்டு

மதுரை ஆரபாளையம் டவுன் பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் நகை பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தெற்கு வெளி வீதி சப்பாணி கோயில் மேற்கு சந்து பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் 42 .இவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார் .அப்போது அவர் வைத்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் பணம் ரூபாய் ஆயிரத்தை மர்ம ஆசாமிதிருடி விட்டார் .இந்த திருட்டு பின்னர் அவருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக புஷ்பம் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மாவட்ட கலெக்டர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

691 கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்தவர் ராஜாமணி இவர் இன்று தேர்தல் ஆணையத்தால் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami