சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன், தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1.மணி (எ) எட்டு மணி, வ/26, திருவேற்காடு 2.அந்தோணி ராஜ் (எ) கரி, வ/27, மாங்காடு ஆகிய இருவர் மீது T-4 மதுரவாயல் காவல் நிலையத்திலும் 3.அப்துல்காதர், வ/41, அண்ணா நகர் என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் 4.அருள், வ/27, மாதவரம் என்பவர் மீது M-1 மாதவரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய 30.03.2021 அன்று உத்தரவிட்டதின்பேரில், மேற்படி 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.