மதுரை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

Admin

மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர்கைது

மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் .
சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துரையை சேர்ந்தவர் பாலமுருகன் 35 .இவருக்கும் எம்சி காலனியை சேர்ந்த பிச்சைமணி மகன் ராஜசேகர் 22 , அபிமன்னன் தெருவைச் சேர்ந்த அனந்த பத்மநாபன் என்ற அப்பனும் 19,எம்.சி காலனியைச் சேர்ந்தகார்த்திக்25 இவர்கள் மூவரும் பாலமுருகனை ஆட்டு மந்தை பொட்டல் பின்புறம் சென்றபோது வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில்திலகர்திடல்போலீசார்வழக்குப்பதிவுசெய்து மூவரையும் கைது செய்தனர்.


ஐராவத நல்லூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

மதுரை ஐராவதநல்லூர் செல்வபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் மகள் சௌபர்ணிகா தேவி 23.இவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தந்தை அனந்தபத்மநாபன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தெற்குவாசல் சின்ன கடை தெருவில் வாயில் நுரை தள்ளிமயங்கி விழுந்துவாலிபர் சாவு

மதுரை தெற்கு வாசல் சின்னக் கடைத் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் முருகேசன் 36. இவர் அந்த பகுதியில் வாயில் நுரை தள்ளியநிலையில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார் .இந்ததகவல் அறிந்த தெற்குவாசல்போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா சாவுக்கானகாரணம்என்ன என்பது குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை செல்லூரில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

மதுரை தாகூர் நகர் மாரியம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பார்வதி அம்மாள் 68. இவர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.இதில் தீயில் கருகி ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பேரன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை பெருங்குடியில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

மதுரைஏப்ரல் 13 பெருங்குடியில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே பரம்புப்பட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் ரவி செல்வம் மகன் முருகேசன்20. இவர் பரம்புப்பட்டியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார் .அப்போதுகட்டுப்பாட்டைஇழந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தவிபத்து குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை அருகே மணல் கடத்தல் 2 பேருக்கு வலை

706 கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452