முருங்கை பூவின் மகத்துவம்!!!!

Admin
0 0
Read Time7 Minute, 12 Second
முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது.
குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது.
இப்படிப் பட்ட முருங்கைப் பூவில் என்ன நலன்கள் இருக்கின்றது என்பதைப் காணலாம்.
 • முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

 • உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும்.

 • அதிகமான பித்தத்தை போக்கும்.

 • இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.

 • கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும்.

 • இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 • 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள்.  இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

 • முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

 • அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

 • சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

 • ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

 • சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படும். அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

 • ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக ஆய்ந்து அலம்பி, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சையும், தோலுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.

 • முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.

 • இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும்.

 • விரை வீக்கம் சுருங்க, முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.

 • பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேக வைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து வர வயிற்றுவலி குணமாகும்.

 • முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

 • முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

 • முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

 • முருங்கைப் பூ நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்பட செய்யும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப்பெற செய்யும்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலவசமாக உணவளிக்கும் காவலர்

645 சென்னை: சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami